உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலர் நாற்றுக்கு போர்வையாகும்கோத்தகிரி மலார் செடிகள் பனி தாக்கத்தை தடுக்க நடவடிக்கை

மலர் நாற்றுக்கு போர்வையாகும்கோத்தகிரி மலார் செடிகள் பனி தாக்கத்தை தடுக்க நடவடிக்கை

ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 'கோத்தகிரி மலார்' செடிகளை மூடி, பனித்தாக்கத்தில் இருந்து, மலர் நாற்றுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறதுநீலகிரியில், மே மாதம் கோடை விழா நடக்கிறது. இவ்விழாவின், ஒரு நிகழ்வாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், ஐந்து நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது.லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலர்கண்காட்சியை கண்டு களிக்கின்றனர். அதற்காக, பூங்காவை தயார் செய்ய பூர்வாங்க பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 5,000 மலர் நாற்றுகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.தற்போது, நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக, ஊட்டியில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. பனித்தாக்கத்தால், பூங்கா புல்தரை கருகாமல் இருக்க, அதிகாலை நேரத்தில் 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மேலும், மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளை 'கோத்தகிரி மலார்' செடிகளை மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது.தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் கூறுகையில், ''நடப்பாண்டு கோடை சீசனுக்கான பணிகள் முன்கூட்டியே துவங்கப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 5,000 மலர் நாற்றுகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ