மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணிய சுவாமிக்குதைப்பூச சிறப்பு பூஜை.
08-Feb-2025
குன்னுார் : வெலிங்டன், கோதண்டராம சுவாமி திருக்கோவில் மற்றும் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பூஜைகள் நடந்தது. குன்னுார், வெலிங்டனில், நுாற்றாண்டு பழமையான கோதண்டராம சுவாமி மற்றும் பாலசுப்ரமணிய சுவாமி கோவில்களின், விமானங்கள் திருப்பணி நடந்தன. கோவிலின் முன்புறம், விநாயகர், பைரவருக்கு புதிதாக வெளியில் மண்டபம், மகா மண்டபத்தின் உட்புறம் புதிய கொடிமரம், அன்னதானக்கூட திருப்பணி நிறைவு பெற்றது. முன்னதாக, கணபதி வழிபாடு, வேதா அனுக்ஞை, புண்யாகவாசனம் வாஸ்துசாந்தி, கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக, சுதர்சன ஹோமங்கள், கும்பஸ்தாபனம், வேதிகார்ச்சனை, முதல் கால வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. இன்று காலை, 9:05 மணியில் இருந்து காலை, 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறையினர், திருப்பணிக்குழுவினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
08-Feb-2025