மேலும் செய்திகள்
வெண்ணைமலையில் தைப்பூச விழாபிப்., 3ல் துவக்கம்
31-Jan-2025
குன்னுார்; குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும், 9ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவையொட்டி பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.குன்னுார் மார்க்கெட் வி.பி., தெரு பகுதியில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த சிவ சுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, இந்து அறநிலையத்துறை சார்பில் திரு கோவில் பணிகள் துவங்கியது. கடந்த ஓராண்டாக, சிவசுப்ரமணியர் சேவா சங்கத்தினர் பணிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 31ம் தேதி, கோவில் வளாகத்தில் முகூர்த்த கால் நடப்பட்டு முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நடந்தது. வரும், 6ல் இருந்து 8ம் தேதி வரை, கோபுர கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வருதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 9ல், காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. சேவா சங்கத்தினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
31-Jan-2025