மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவிலில் வரும் 14ல் கும்பாபிஷேகம்
11-Nov-2024
கூடலுார்; மேல்கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழித்துணை விநாயகர், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.மேல்கூடலுார் அருள்மிகு சந்தக்கடை மாரியம்மன் கோவில் வளாகத்தில், புதிதாக வழித்துணை விநாயகர், ஐயப்பன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீவிநாயகர் வழிபாடு, முதல் கால யாகபூஜை, கோபுரம் கலசம் வைத்தல், திரவ்யயாகம், பூர்ணாகுதி, ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் சாமியந்திர ஸ்தாபனம் பிரதிஷ்டை செய்தல் நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று, காலை முதல், ஸ்ரீ விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகபூஜை, ஸ்பரிசாகுதி, திரவ்யயாகம், மகா பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடந்தது, 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து, கலசநீர் கோபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து, வழித்துணை விநாயகர், ஐயப்பன் கோவில்களில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
11-Nov-2024