ஆய்வக உபகரணம்
கூடலுார்; கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்குவதற்காக, எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, 6.25 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வாங்கப்பட்ட புதிய ஆய்வக உபகரணங்கள் பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆசிரியர் லியோ ஆண்ட்ரூஸ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி தலைமை வகித்தார்.கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், புதிய அறிவியல் ஆய்வக உபகரணங்களை பள்ளிக்கு வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், ஆசிரியர் நாகநாதன், அ.தி.மு.க., நிர்வாகிகள் பத்மநாதன், ராஜா தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.