கால்பந்து லீக் போட்டியில்-- லாரன்ஸ் பள்ளி அணி வெற்றி
ஊட்டி: ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி மைதானத்தில், 11 வயதுக்கு உட்பட்டோருக்கான 'லீக்' கால் பந்து போட்டி -நடந்தது. நீலகிரி கால்பந்து சங்கம் சார்பில் கடந்த, 6ம் தேதி தொடங்கி, மூன்று நாட்கள் நடந்த இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மொத்தம், 13 அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டி தொடரின் இறுதிப்போட்டி, ஊட்டி லாரன்ஸ் பள்ளி மற்றும் கோத்தகிரி சத்தியகாத்தி பள்ளிகளுக்கு இடையே, நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் லாரன்ஸ் பள்ளி வெற்றி பெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நீலகிரி ரெட்சிராஸ் சொசைட்டி முன்னாள் தலைவர் கேப்டன் மணி மற்றும் ஊட்டி டிராபிக் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் மோகன் முரளி மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.