சோலுார் மட்டத்தில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்
கோத்தகிரி ; கோத்தகிரி சோலுார்மட்டம் பகுதியில், வனத்தை ஒட்டிய குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கோத்தகிரி, கீழ் கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு வனச்சரங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் சமீப காலமாக, வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.குறிப்பாக, சிறுத்தைகள் அவ்வப்போது வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடர்கிறது.இந்நிலையில், நேற்று சோலுார்மட்டம் பகுதியில், குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில், பாறையின் மேல் சிறுத்தை நீண்ட நேரம் அமர்ந்திருந்தது. இதனை, அவ்வழியாக சென்றவர்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். அப்பகுதியில் வாழும் மக்கள் நடமாட அச்சம் அடைந்துள்ளனர். சோலுார் மட்டம் சுற்றுப்புற பகுதிகளில் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்ட பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் கடந்த சில நாட்கள் சிறுத்தை பகல் நேரத்தில் உலா வருகிறது. இதனால், அச்சமடைந்த மக்கள் தோட்ட பணிகளுக்கு செல்ல தயங்கி வருகின்றனர். எனவே, சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஏதுவாக, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர். 'சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஏதுவாக, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.