கூர்கா கேம்ப் பகுதியில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தை
குன்னுார்: குன்னுாரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெலிங்டன் அருகே பேரக்ஸ் கூர்காகேம்ப் பகுதியில், நேற்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை உலா வந்தது. அப்போது, வீட்டில் கட்டி வைத்திருந்த நாயை வேட்டையாட வந்த போது, கம்பி வேலியை தாண்டி உள்ளே செல்ல முடியாததால் மீண்டும் திரும்பி சென்றது. இது அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.