உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  எடப்பள்ளியில் ரூ.22 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் திறப்பு

 எடப்பள்ளியில் ரூ.22 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் திறப்பு

குன்னுார்: குன்னுார் எடப்பள்ளி கிராமத்தில் நுாலக திறப்பு விழா நடந்தது. குன்னுார் எடப்பள்ளி நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட எடப்பள்ளி ஊராட்சி மன்ற வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்தியதை தொடர்ந்து, எடப்பள்ளி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாக உத்தரவில், 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, கிராமத்தில் புதிய நுாலகம் கட்டப்பட்டது. கடந்த செப்., மாதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று மாநில முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக நுாலகத்தை திறந்து வைத்தார். இதனையொட்டி நுாலகத்தில் நடந்த விழாவில், எடப்பள்ளி ஊர் மூத்த தலைவர் நாராயண மூர்த்தி முன்னிலை வகித்தார். ஊர் தலைவர் லிங்கன் தலைமையில், ஊர் பிரமுகர்கள் அரிச்சந்திரன், ராஜு, காளிதாஸ், பூசாரி சந்திரன், நடராஜ் உட்பட பலர் பங்கேற்று பேசினர். நுாலக அலு வலர் கிளமென்ட் மேற்பார்வையில், நுாலகர் ராமச்சந்திரன், ஜெகநாதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்