உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய நுாலகம் திறப்பு விழா; உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி

புதிய நுாலகம் திறப்பு விழா; உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரி அரவேனு பஜாரில், புதிய நுாலகம் திறப்பு விழா நடந்தது.கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சியில், 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 'இப்பகுதியில், புதிய கிளை நுாலகம் அமைக்க வேண்டும்,' என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.தொடர்ந்து, ஜக்கனாரை ஊராட்சி நிர்வாகம் சார்பில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட கட்டடம், தேர்வு செய்யப்பட்டு, நுாலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, அண்ணா பிறந்தநாள் விழாவை ஒட்டி, புதிய கிளை நுாலகம் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் ஆகியோர், நுாலகத்தை திறந்து வைத்தனர். ஊராட்சி செயலர் மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை