பூங்காவில் சுற்றித் திரியும் ஒற்றை கரடி; கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சீசன் காலங்கள் மட்டுமல்லாமல், பிற நாட்களிலும் கணிசமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g68mz6da&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்பூங்காவில் காலை நேரத்தில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால் அதிகாலை நடை பயிற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பூங்கா அருகே உள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள கரடி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இரு வாரங்களாக பூங்காவில் நுழைந்த அந்த கரடி அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்து சுற்றுலா பயணியர், பூங்கா ஊழியர்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட உள்ளுர் மக்களை கரடி துரத்தியதால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் பிபீத்தா கூறுகையில், ''தாவரவியல் பூங்காவில் கரடி ஒன்று சில நாட்களாக சுற்றித்திரிந்து ஊழியர்களை அச்சுறுத்தி வருகிறது. நடைப்பயிற்சி வந்தவர்களை துரத்தியதால் நடைபயிற்சியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கூண்டு வைத்து கரடியை பிடித்து வனத்தில் விட வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்,'' என்றார்