நேரு பூங்காவில் பராமரிப்பு பணி
கோத்தகிரி: கோத்தகிரி தேடு பூங்காவில் கூடுதல் பணியாளர்களுடன், பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பூங்கா, உள்ளூர் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு மையமாக அமைந்துள்ளது. கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் பராமரித்து வரும் பூங்காவை, சீசன் நாட்களில், உள்ளூர் மக்களுடன், நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டுக்களித்து செல்வது வழக்கம். பூங்காவை அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மேம்படுத்தும் விதமாக, தற்போது பணிகள் நடந்து வருகிறது. நடைப்பாதையோரம் பட்டுப்போன மலர் பாத்திகள் வெட்டப்பட்டு, மலர் நடவு செய்வதற்காக, ஏற்றவாறு நிலத்தை பண்படுத்தி, புல்வெளிகள் நேர்த்தியாக சமன் செய்யும் பணி நடந்து வருகிறதுப்பட்டு வருகிறது. நகராட்சி கமிஷனர் இளம் பரிதி ஆலோசனைப்படி, பூங்காவில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இமாதம் இறுதி அல்லது ஜன., முதல் வாரத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்து, மே மாதம் பூத்து குலுங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.