உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  முயலை வேட்டையாட சுருக்கு வைத்தவர் கைது

 முயலை வேட்டையாட சுருக்கு வைத்தவர் கைது

கோத்தகிரி: கோத்தகிரி அருகே, முயலை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்தவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி வன கோட்டம், கட்டபெட்டு வனச் சகரம், அளக்கரை பிரிவு ரேலியா காவல் பகுதிக்கு உட்பட்ட, பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் உள்ள சோலார் மின் வேலியில், சுருக்கு கம்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கட்டபெட்டு வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முயல் உட்பட வனவிலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. வனத்துறையினர் நடத்திய விசாரணையில், குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட, கோழிக்கரை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்,45, சுருக்கு கம்பி வைத்தது தெரியவந்தது. மாவட்ட அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, ஜெயக்குமாருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'வன விலங்குகளை வேட்டையாடுவது குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது, வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை