உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காதல் வலை வீசிய நபர் குண்டர் சட்டத்தில் கைது

காதல் வலை வீசிய நபர் குண்டர் சட்டத்தில் கைது

குன்னுார்; குன்னுாரில் மாணவிகளுக்கு காதல் வலை வீசி, பாலியல் வன்கொடுமை செய்த நபர், குண்டர் சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.குன்னுாரை சேர்ந்த நபர் உமேஷ்வரன், 26. வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர் பணியை விட்டு, 6 மாதங்களாக, பழங்குடியின கிராமத்தில், பெட்டி கடை நடத்தி வந்தார். கடைக்கு வரும் சிறுமிகளிடமும், மொபைல்போன் எண் வாங்கி காதல் வலை வீசியுள்ளார். இதில், அவருடன் பழகிய, 16 வயது மாணவி ஒருவர், 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்ததால், குழந்தைகள் பாதுகாப்பு நல பிரிவில் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், இந்த மாணவி உட்பட, கடைக்கு ரீசார்ஜ் செய்ய வந்த, 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளதும், ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் குன்னுார் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கிளை சிறையில் அடைத்தனர்.இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நீலகிரி எஸ்.பி., நிஷா, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.தொடர்ந்தது, கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின்பேரில், போலீசார், உமேஸ்வரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !