மாரத்தான் போட்டி வென்றவர்களுக்கு பரிசு
ஊட்டி; ஊட்டியில், த.வெ.க., சார்பில், போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் துவங்கிய மாரத்தான், சேரிங்கிராஸ், தீயணைப்பு நிலையம், கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டீபன் சர்ச் சாலை வழியாக, மீண்டும் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தை அடைந்தது.இதில், போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, தலா, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. த.வெ.க., கொள்கை பரப்பு மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.