உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

கோத்தகிரி : கேத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி, கோத்தகிரி வட்டார வளமையம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட உதவித்திட்ட அலுவலர் அர்ஜூணன் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராயர் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில், கண், ஆர்த்தோ, இ.என்.டி., குழந்தைகள் நல மற்றும் உளவியல் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதித்து, அடையாள அட்டை வழங்கினர். அதில், பயனடைந்த, 103 மாணவர்களில், 18 பேருக்கு அடையாள அட்டை பெற பரிந்துரைக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், ஏழு பேருக்கு, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகை, மற்றும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க பரிந்துரைத்தனர். முகாமில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ராஜூ, ஜமுனா, செந்தில் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை