உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையில் விளைந்த மெகா சைஸ் காளான்; ஆச்சரியத்தில் உள்ளூர் மக்கள்

மழையில் விளைந்த மெகா சைஸ் காளான்; ஆச்சரியத்தில் உள்ளூர் மக்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே குந்தலாடி பகுதியில், தேயிலை தோட்டத்தில் காணப்பட்ட 'மெகா சைஸ்' காளான்களை பார்த்து மக்கள் வியப்படைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் விவசாய தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் மழை காலத்தில் பல்வேறு வகையான இயற்கையான காளான்கள் விளைகிறது. இந்த வகை காளான்கள் ஊட்டச்சத்து மற்றும் சுவை நிறைந்து உள்ளது. இந்நிலையில், பந்தலுார் அருகே குந்தலாடி பகுதியில், தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஏதோ விலங்கு இறந்து கிடப்பதாக கூறி ஓடி வந்துள்ளனர். பின்னர் அருகே சென்று பார்த்தபோது அது காளான் என்பது தெரியவந்தது. பின்னர் அதனை பறித்து, அப்பகுதி மக்களிடம் காட்டியுள்ளனர். 'மெகா சைஸ்' காளான்களை பார்த்த மக்கள் ஆச்சர்யமடைந்தனர். தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஜெயலட்சுமி கூறுகையில், ''சாதாரணமாக இருப்பதை விட மெகா சைசில் உள்ள இந்த காளான் குறித்து ஆய்வு செய்த பின்னர், இதன் வகை குறித்து கூற முடியும். எனவே இதனை கோவை வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை