உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை; கட்டுமான தொழிலாளர்களுக்கு அழைப்பு

நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை; கட்டுமான தொழிலாளர்களுக்கு அழைப்பு

ஊட்டி ; நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர கட்டுமான தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் அறிக்கை: மாநிலத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டது. 19 தொழிலாளர் நல வாரியம் செயல்படுகிறது. இதில், வெளி மாநிலம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிக அளவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வாரத்தில் புதன்கிழமை காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை முகாம் நடக்கிறது. புதன்கிழமை அரசு விடுமுறையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த அரசு வேலை நாட்களில் முகாம் நடக்கிறது. குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தக்க ஆவணங்களுடன் வயதிற்கான ஆவணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிப் புத்தகம், புகைப்படம், நியமனதாரருக்கான ஏதேனும் ஒரு அடையாள ஆவணம் ஆகிய அசல் ஆவணங்களுடன் இவ்வலுவலகத்தை அணுகி பயன் பெற வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி