உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மினி பஸ் தடுத்து நிறுத்தம்; போலீசார் பேச்சுவார்த்தை

மினி பஸ் தடுத்து நிறுத்தம்; போலீசார் பேச்சுவார்த்தை

கூடலுார்; கூடலுார் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மினி பஸ் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் சில பஸ்கள் அனுமதியில்லாத வழித்தடத்தில் செல்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில், செலுக்காடி வழியாக, கூடலுார் மூன்றாம் 'டிவிசன்' பகுதிக்கு இடையே இயக்கப்பட்டு வரும் மினிபஸ், அனுமதி இல்லாத வழித்தடத்தில் இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால், மினி பஸ்சை, ஆட்டோ ஓட்டுனர்கள் தடுத்து நிறுத்தினர். போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அனுமதி பெற்ற வழியில் மினிபஸ் இயக்குவதாக, பஸ் ஊழியர்கள் தெரிவித்தனர். அதன் உத்தரவு நகலை ஆய்வு செய்த போலீசார் பஸ் இயங்க அனுமதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ