உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தீயை கட்டுப்படுத்த நவீன உபகரணங்கள்

வனத்தீயை கட்டுப்படுத்த நவீன உபகரணங்கள்

பந்தலுார்;கூடலுார் வனக்கோட்டத்தில், வனத்தீயை கட்டுப்படுத்த நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.கூடலுார் வனக்கோட்டத்தில், கூடலுார், ஓவேலி, ஜீன்பூல், பிதர்காடு, சேரம்பாடி, தேவாலா ஆகிய, 6 வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு தேயிலை தோட்டங்கள் தவிர, சிறு விவசாய தோட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன.நடப்பாண்டு வழக்கத்தை விட கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆறுகள், நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்து, வறண்ட நிலையில் உள்ளது.இதனால், கோடை கால பின்பகுதியில் ஏற்படும் வனத்தீ பாதிப்பு, நடப்பாண்டு முன்னதாக துவங்கி உள்ளன. வனத்தீயை கட்டுப்படுத்த, மக்கள் மத்தியில் வனத்துறையினர் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தபோதும், சமூக விரோதிகள் வனப்பகுதிக்கு தீ வைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், பசுமையான வனங்கள் அழிந்து, அரிய வகை தாவரங்கள், பறவைகள், ஊர்வன, விலங்குகள் அழிந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, வனத்துறையிடம் போதிய உபகரணங்கள், இல்லாத நிலையில், தீயை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநில அரசு வனத்துறை மூலம், வனத் தீயை கட்டுப்படுத்த ஏதுவாக, தண்ணீர் மூலம் தீயை அணைக்கும் கருவி, காலணி, பாதுகாப்பு கவச உடை, கையுறை, கத்தி, தொப்பி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி உள்ளது. இதை தொடர்ந்து, பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்தில், பிதர்காடு மற்றும் சேரம்பாடி வன பணியாளர்களுக்கு நவீன உபகரணங்களை கொண்டு, தீயை கட்டுப்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கம் செய்து காட்டும் நிகழ்ச்சி நடந்தது.வனச்சரகர் ரவி, வனவர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், பெலிக்ஸ் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வன பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், ' நடப்பாண்டு அரசு பல்வேறு உபகரணங்களை வழங்கி உள்ளதால், வனத்தீ பரவலை எளிதாக கட்டுப்படுத்த இயலும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை