உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலை நேர இயற்கை காட்சிகள்; வியப்படையும் சுற்றுலா பயணிகள்

காலை நேர இயற்கை காட்சிகள்; வியப்படையும் சுற்றுலா பயணிகள்

பந்தலுார்; மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படும் மேகமூட்டம் மற்றும் அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. நீலகிரியில் கூடலுார், பந்தலுார் கிராமங்களை ஒட்டி, வனப்பகுதிகள் மற்றும் அதனை சார்ந்து, மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. இதன் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சாலைகளில் பயணிக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள், சுற்றுலா பயணிகள் பசுமையான வனம், பள்ளத்தாக்கு பகுதிகள், தமிழக-கேரளா மாநிலங்களை இணைக்கும் மலை தொடர்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். தற்போது, மழை பெய்து வரும் நிலையில் காலை நேரங்களில், நீல நிறத்தில் காட்சி தரும் மலை தொடர்கள்,மேக கூட்டங்கள், வழிந்தோடும் அருவிகள், பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. பந்தலுார் வழியாக வந்து செல்லும் வெளியூர் சுற்றுலா பயணிகள், இந்த அழகிய காட்சிகளை காலை நேரத்தில் ரசித்து, வியந்து, 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை