மேலும் செய்திகள்
மின்சார வேலியில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி
17-Nov-2026
பாலக்காடு: பள்ளி முடிந்து தாயுடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பிய போது, லாரி மோதியதில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் முதலமடை, அடவுமரம் பகுதியை சேர்ந்த விஷ்ணுவின் மூத்த மகன் ஸ்ரீஹரி பிரசாத், 7. இவர், தமிழக எல்லையில், கோவிந்தாபுரம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி ஸ்ரீஷைன், 5, அதே பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும், தாய் மரீனா தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றார். கோவிந்தாபுரம் பழைய வணிகவரி சோதனைச்சாவடி அருகே, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஸ்ரீஹரி பிரசாத், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மரீனா மற்றும் ஸ்ரீஷைன் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
17-Nov-2026