மேலும் செய்திகள்
மங்கள வேல் வழிபாடு: மக்கள் குவிந்தனர்
18-Dec-2025
குன்னுார்: குன்னுாரில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், மங்கள வேல் அபிஷேக பூஜை நடந்தது. வீரவேலுக்கு, அன்னையர்கள் தங்களது கைகளால், மங்கள அபிஷேகம் செய்து, நாமாவளி பஜனைகளை பாடினர். கந்த சஷ்டி கவசம் பாராயணம், திருமந்திரம், கூட்டு வழிபாடு, தீப வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் முருக பக்தர்கள் ஐயப்பன், மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ஷீலா செந்தில், இந்து முன்னணி நீலகிரி மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ஹரிஹரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
18-Dec-2025