உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் காட்டெருமை உலா வாகன ஓட்டிகள் திணறல்

சாலையில் காட்டெருமை உலா வாகன ஓட்டிகள் திணறல்

குன்னுார்: குன்னுார்– ஊட்டி பிரதான சாலையில் அருவங்காட்டில் உள்ளூர் வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் காட்டெருமை ஒன்று சாலையின் நடுவே உலா வந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. குன்னுார்–ஊட்டி சாலை அருவங்காடு பகுதியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை அருகே கூட்டமாக காட்டெருமைகள் உலா வருகின்றன. அதில், தொழிற்சங்க அலுவலகம் அருகே சாலையில் ஒரு காட்டெருமை நடந்து சென்றது. சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்த வேளையில், காட்டெருமை குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கியும், ஓரமாக நிறுத்தியும் பீதியுடன் கடந்து சென்றனர். சமீப காலமாக குடியிருப்பு மற்றும் முக்கிய சாலைப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை