மேலும் செய்திகள்
முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை
10-Nov-2026
பந்தலுார்: பந்தலுார் முருகன் கோவிலில், 1008 விளக்கு ஏற்றி பக்தர்கள் முருகனை வழிபட்டனர். பந்தலுார் அருள்மிகு முருகன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், கார்த்திக தீபத்தை முன்னிட்டு, நேற்று (நவ.,24) காலை முதல் விநாயகர், சிவபெருமான், முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலை நேரம் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், 1008 விளக்கு ஏற்றி, முருகனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மேலும், கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, சுடலை கொளுத்தப்பட்டது. அதில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற உப்பு இறைத்து வழிபட்டனர். பூஜைகளை ரமேஷ் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் ஹரிராமன், நிர்வாகிகள் சிவராஜ், மோகன்ராஜ், மகேந்திரன், வாசுதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.
10-Nov-2026