உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாடுகாணி ஜீன்பூல் பெயர் மாற்றம்: சுற்றுலா பயணியர் குழப்பம்

நாடுகாணி ஜீன்பூல் பெயர் மாற்றம்: சுற்றுலா பயணியர் குழப்பம்

கூடலூர்: கூடலூர், நாடுகாணி அருகே அமைந்துள்ள ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், ஜிப்லைன், காட்சி கோபுரம், மீனகம், பசுமை குடில்கள், அருங்காட்சியம், பழமையான தாவரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. மேலும், இங்கு மலையேற்றம் செல்லும் வசதியும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான விடுதிகளும் உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நுழைவாயில் பகுதி சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. நுழைவு வாயிலில் இருந்த ஜீன்பூல் சூழல் சுற்றுலா, என்ற பெயர் மாற்றப்பட்டு 'நாடுகாணி ஜங்கிள்' சூழல் சுற்றுலா என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜீன்பூல் தாவர மையத்திற்கும், 'நாடுகாணி ஜங்கிள்' என்பதற்கும் வித்தியாசம் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணியர் குழப்பமடைந்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் சூழல் மையத்தை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், நுழைவாயில் பகுதியில் 'நாடுகாணி ஜங்கிள்' சூழல்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ