உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய மின் சிக்கன வார விழா; விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய மின் சிக்கன வார விழா; விழிப்புணர்வு ஊர்வலம்

கோத்தகிரி; தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில், கோத்தகிரியில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கோத்தகிரி மின்சார துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை, நீலகிரி மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில்,'திறன் மிக்க மின்சாதனங்களை தேர்வு செய்து நன்கு பராமரித்து மின் செலவை குறைப்பது; தேவையில்லாத இடங்களில் மின்சாரத்தை தவிர்ப்பது; நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்துவது; மின்விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை பயன்படுத்துவது; மின் மோட்டார்களுக்கு ஐ.எஸ்.ஐ.,முத்திரையிட்ட கெபாசிட்டர்களை பொருத்துவது.மேலும், குளிர்சாதன பெட்டியின் கதவுகளை அடிக்கடி திறப்பதை தவிப்பது; சூரிய சக்தி சாதனங்களை பயன்படுத்துவது; குண்டு பல்புகளுக்கு பதிலாக, குழல் விளக்குகள், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்பது,' என, பொதுமக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் பேசியதாவது: மின் சிக்கனத்தால், நாட்டில் பொருளாதார வளர்ச்சியுடன், வேலைவாய்ப்பு உருவாகும். நீலகிரியில், தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம், 2 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. நான் முதல்வன் திட்ட மூலம், 43 சதவீதம் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மாவட்டத்தில், 738 பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 400 மின்மாற்றி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரம் பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுமானவரை, மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு, எல்.இ.டி., பல்புகள் பரிசாக வழங்கப்பட்டது. இதில், குன்னூர் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, கோத்தகிரி உதவி செயற்பொறியாளர் மாதன் உட்பட, பல பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை