தேசிய நுாலக வார விழா மாணவர்களுக்கு பரிசு
பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடு கிளை நூலகம் சார்பில் தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டது. அதில், ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, குரல் ஒப்புவித்தல், ஓவியம் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் சுனில் குமார் வரவேற்றார். நுாலகர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்து பேசினார். பள்ளி ஆசிரியர்கள் ஜமீலா, சைனபா, வைஜயந்திமாலா, வசந்தா, பிரசாத் பங்கேற்றனர். --இதேபோல், சேரம்பாடி நூலகத்தில், நடந்த விழாவில் வாசர் வட்ட தலைவர் ராமையா தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நுாலகர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.