உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சித்தகிரி சாய் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலம்; லிங்க பூஜையில் சிவாச்சாரியார் மந்திரங்கள்

சித்தகிரி சாய் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலம்; லிங்க பூஜையில் சிவாச்சாரியார் மந்திரங்கள்

குன்னுார் : குன்னுார் எடப்பள்ளி சித்தகிரி சாய் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.குன்னுார் எடப்பள்ளியில் உள்ள சித்தகிரி ஷீரடிசாய் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி மகோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது.நடப்பாண்டின் திருவிழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. அதில், துர்கை, மகாலட்சுமி, சரஸ்வதி அம்மன் கொலு வைத்து, சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது.நேற்று காலை கோவிலில் லிங்க பூஜை நடந்தது. அதில், சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓத, சிறப்பு வழிபாடுகள், மகா தீபாராதனை, ஷீரடி சாய்பாபா மங்கள ஆரத்தி, 'தாரா ஸஹித' சண்டி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, திரிபுர சுந்தரி ஸஹித சண்டி ஹோமம் நடந்தது.

நாள்தோறும் ேஹாமம்

நாளை, 'புவனேஸ்வரி மந்திர ஸஹித சண்டி ஹோமம்; 6ம் தேதி திரிபுர பைரவி மந்திர சண்டி ஹோமம், 7ம் தேதி சின்னமஸ்தா மந்திர சண்டி ஹோமம்; 8ம் தேதி துமாவதி; 9ம் தேதி பகிளாமுகி; 10ம் தேதி மாதங்கி சண்டி ஹோமம்; 11ம் தேதி சாம்ராஜ்ய லட்சுமி மந்திர ஸஹித சண்டி ஹோமம்,' நடக்கிறது. மேலும், 12ம் தேதி காலை, 'மகா கணபதி பூஜை, குரு வந்தனம், மகாசங்கல்பம், கோ பூஜை, மகா கணபதி, லட்சுமி, காயத்திரி நவதுர்கா, தன்வந்திரி, ஷீரடி சாய்பாபா ஸஹித,' உட்பட பல்வேறு ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து, கலச அபிஷேகம், 108 தீர்த்த அபிஷேகம், மகா பிரார்த்தனை, மங்கள ஆரத்தி, பிரசாத வினியோகம்,' ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை சித்தகிரி சாய் கோவில் நிர்வாகத்தினர், சாய் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ