உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / என்.சி.எம்.எஸ்., கடைகள் பொலிவுப்படுத்தும் பணி; ஏலம் விட ஏற்பாடுகள் தீவிரம்

என்.சி.எம்.எஸ்., கடைகள் பொலிவுப்படுத்தும் பணி; ஏலம் விட ஏற்பாடுகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி என்.சி.எம்.எஸ்., கடைகளை விரைவில் டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 30க்கு மேற்பட்ட புதிய கடைகள் கட்டப்பட்டது. அரசியல் தலையீடு காரணமாக முறையாக டெண்டர் விட முடியாமல் கூட்டுறவு துறை நிர்வாகம் செய்வதறியாமல் தவித்தது. அங்கு வியாபாரம் செய்து வந்த உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கட்டப்பட்ட புதிய கடைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. தற்போது, முறையாக டெண்டர் விட்டு ஏலம் எடுப்பவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய கூட்டுறவு துறையில் கமிட்டி அமைத்து அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். கடைகளை கட்டி பல ஆண்டுகள் ஆனதால் கடைகள் முன்பு முட்புதர் சூழ்ந்து,அப்பகுதி பொலிவிழந்து காணப்பட்டது.விரைவில் கடைகளை டெண்டர் விட இருப்பதால், தனியார் ஆட்களை கொண்டு கடை கட்டடங்கள் சுத்தப்படுத்தி வர்ணம் பூசும் பணி விரைவாக நடந்து வருகிறது. விரைவில் டெண்டர் விடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ