உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நேரு பூங்காவில் பராமரிப்பு பணி :கூடுதல் பணியாளர்கள் தேவை

 நேரு பூங்காவில் பராமரிப்பு பணி :கூடுதல் பணியாளர்கள் தேவை

கோத்தகிரி: கோத்தகிரி நேரு பூங்காவில் புல் தரையை, நேர்த்தியாக வெட்டி பராமரிப்பு பணி நடந்து வருகிறது. கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. இங்கு, கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி நடத்தப் படுகிறது. உள்ளூர் மக்கள் ஓய்வெடுக்க உகந்த இடமாக பூங்கா அமைந்துள்ளது. கோத்தகிரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பிறகு, இங்கு பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளனர். பூங்காவில், டிக்கெட் வசூலிப்பாளர் உட்பட மூவர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், பூங்காவை மேம்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இந் நிலையில், அவ்வப்போது பெய்து வரும், சாரல் மழையில், பூங்காவின் புல் தரையில், புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனை நேர்த்தியாக வெட்டி சீரமைக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி, பூங்காவை சிறப்பாக பொலிவுப்படுத்தினால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ