மேலும் செய்திகள்
ஊட்டி -- மேட்டுப்பாளையம் மலை ரயில் கட்டணம் உயர்வு
19 hour(s) ago
வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
21-Feb-2026
அணைகள் நீர்மட்டம்
21-Feb-2026
நீர் பனி காரணமாக காய்ந்து காணப்படும் தேயிலை
21-Feb-2026
பந்தலூர் : தேவாலா கோழிக்கோடு சாலையில் நீர்மட்டம் பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் தேவாலா கோழிக்கோடு சாலையில் பந்தலூர் அருகே நீர்மட்டம் பகுதியில் சுமார் 20 அடி நீளத்திற்கு சாலையின் நடுப்பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பிளவு ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் சுரேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பிளவு ஏற்பட்டுள்ள சாலையின் நடுப்பகுதியில் மணல் கொட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதே இடத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளவு ஏற்பட்டு நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன டிரைவர்கள் பயத்துடனேயே இயக்கி வருகின்றனர்.
19 hour(s) ago
21-Feb-2026
21-Feb-2026
21-Feb-2026