உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையை சீரமைக்க ரூ.4 கோடியில் திட்டம்

சாலையை சீரமைக்க ரூ.4 கோடியில் திட்டம்

கூடலூர் : 'கூடலூர் - ஓவேலி சாலையை 4 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள் ளது,' என அ.தி.மு.க., வாகன பிரசார கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூடலூர் நகர அ.தி.மு.க., சார்பில்,அண்ணாதுரையின் 103 வது பிறந்த நாள் விழா நடந்தது. அதில், அ.தி.மு.க.,வின் சார்பில் நடந்த பிரசார கூட்டத்துக்கு நகர செயலர் ராஜாதங்கவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் பத்மநாதன் முன்னிலை வகித்தார். வாகன பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மில்லர் பேசுகையில்,''கூடலூர் - ஓவேலி சாலை சீரமைக்க 4 கோடி ரூபாயுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்க உள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார். பின்பு, தலைமை கழக பேச்சாளர் சந்திரன் பேசினார். இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை