உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி உருளை, கேரட்டுக்கு புவிசார் குறியீடு; விவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாய சங்கம் வலியுறுத்தல்

நீலகிரி உருளை, கேரட்டுக்கு புவிசார் குறியீடு; விவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாய சங்கம் வலியுறுத்தல்

ஊட்டி; 'நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைகிழங்கு, கேரட்டுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம், 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகள் தரமாகவும் நல்ல ருசியுடனும் இருப்பதால் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதில், 12 ஆயிரம் ஏக்கரில் உருளை கிழங்கு, 10 ஆயிரம் ஏக்கரில் கேரட் பயிரிடப்படுகிறது. உருளைகிழங்கு, கேரட் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 'இந்த இரண்டு காய்கறிகளுக்கு புவிசார் குறியீடு தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி உருளைகிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ரவி கூறுகையில், ''நீலகிரியில் மற்ற மலை காய்கறிகளை காட்டிலும் உருளைகிழங்கு, கேரட் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் நல்ல வேரவேற்பு உள்ளது. கேரட் நாள்தோறும் பல ஆயிரம் டன் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. உருளை கிழங்கிற்கு செப்., மாதம் முதல் டிச., மாதம் வரை சீசன் சமயம் என்பதால், அதிகபட்சமாக, 60 லாரிகளின், 100 மூட்டை வீதம் ஒரு மூட்டைக்கு, 80 கிலோ அளவுக்கு சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிற மாதங்களில், 25 லாரிகளில் அனுப்பப்படுகிறது. இந்த இரண்டு மலை காய்கறிகளுக்கு புவிசார் குறியீடு வேண்டும். என, சங்க பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மாநில அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை