மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம்: சர்வதேச பழங்குடியினர் தினம்
09-Aug-2025
ஊட்டி; ஊட்டியில் முதல் முதலாக பழங்குடி மக்களுக்கான 'நீலகிரி ரூட்ஸ்' என்படும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையம், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில், முதல் முதலாக, பழங்குடியினர் மக்களுக்கான 'பேஷன் ஷோ' நடந்தது. முன்னதாக, கோத்தர், தோடர், பணியர், குரும்பர், இருளர் மற்றும் காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் குறித்த பல்வேறு அரங்குகளையும், புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, மாவட்டத்திலேயே முதல் முதலாக பழங்குடியின மக்களுக்கான பேஷன் ஷோ நடந்தது. இதில், மேடையில் தோன்றிய பழங்குடியினர் பலர், ஒய்யாரமாக நடந்து வந்து, தங்களது கலாசாரம் மற்றும் அழகை காண்பித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. இதனை பள்ளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில், இதுவரை பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது, முதல் முறையாக, 'நீலகிரி ரூட்ஸ்' திருவிழா நடத்தப்படுகிறது. இதில், பழங்குடியின மக்கள் உட்பட, உள்ளூர் மக்களின் கலசாரத்திற்காக இந்த விழா நடத்தப்படுகிறது,'' என்றார்.
09-Aug-2025