நீலகிரி எம்.பி., ஆய்வு
மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக 97 அடியாக உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10,500 கன அடி நீர் வந்தது. அதன் படி, அணைக்கு வரும் நீரின் வரத்து, மூன்று ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 6,000 கன அடி நீர், மின் உற்பத்திக்காக 4,500 கன அடி நீர் பவானி ஆற்றின் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து, நீலகிரி எம்.பி., ராஜா நேற்று, மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வருவாய் துறை அதிகாரிகளிடம் பவானி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் அளவு, எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.