உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பட்டா மாறுதல் விண்ணப்பங்களை வி.ஏ.ஓ.,விடம் அளிக்க அறிவுரை

பட்டா மாறுதல் விண்ணப்பங்களை வி.ஏ.ஓ.,விடம் அளிக்க அறிவுரை

கூடலூர் : 'கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்,' என ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளார்.கூடலூர் ஆர்.டி.ஓ., தனசேகரன் வெளியிட்ட அறிக்கை: பட்டா மாறுதல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டா மாறுதலுக்காக பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தில் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல், அதற்கான விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்பிக்கலாம். விண்ணப்பங்களை ஒவ்வொரு திங்கள் கிழமையும் கிராம நிர்வாக அலுவலரிடம் நேரடியாக அளித்தால், ஒப்புகை சீட் வழங்கப்படும். விண்ணப்பத்துடன், ஆவணங்களின் 'ஜெராக்ஸ்' இணை­க்க வேண்டும். இதற்கான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.நிர்வாக காரணத்துக்காக வேறொரு கிராமத்துக்­கான கூடுதல் பொறு­ப்பு வகிக்கும் கிராமத்துக்கு செவ்வாய் கிழமை விண்ணப்பம் பெற்று ஒப்புகை சீட்டு வழங்கப்படும். விண்ணப்பதாரர் இரண்­டாவது வெள்ளி கிழமை, மண்டல துணை தாசில்தாரிடம் மூல ஆவணங்களை காண்பித்து சரிபார்க்கப்பட்ட பின், 15 நாளில் ஆணை வழங்கப்படும். உட்பிரிவு பட்டா மாறுதல் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்ட தேதியிலிருந்து 4வது வெள்ளி கிழமை உத்தரவு வழங்கப்படும். பட்டா மாறுதல் வழங்க முடியாத நிலையிருந்தால், அது குறித்து விண்ணப்பதார்களுக்கு தெரிவிக்கப்படும். இத்துடன், முதியோர் ஓய்வூதியம் போன்ற உத­வி தோகைக்கான விண்­ணப்பங்களும் பெற­ப்­படும். வாய்ப்பினை கூடலூர், பந்தலூர் தா­லுகா மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தனசேகரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி