உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் மனித உரிமை கூட்டம்

ஊட்டியில் மனித உரிமை கூட்டம்

ஊட்டி:ஊட்டி நகர மனித உரிமைகள் கழக அறிமுக கூட்டம், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா ஊட்டியில் நடந்தது.கூட்டத்தில், இலங்கை அரசுக்கு மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்; ஊட்டி நகரில் பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும்; நகருக்கு நீர் வழங்கும் கோரி சோலா அணையில் ஏற்பட்டுள்ள நீர்கசிவை சரி செய்ய வேண்டும்; ஊட்டி நகரில் பொது கட்டண கழிப்பிடங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் சண்முகம், செயலாளர் அருள்தாஸ், இளைஞர் அணி தலைவர் ஜேக்கப், செயலாளர் ரிச்சர்ட், இணை செயலாளர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊட்டி நகர மனித உரிமைகள் கழக சரவணன் வரவேற்றார். நகர தலைவர் ஆரோக்கியநாதன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். மண்டல பொறுப்பாளர் ரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நகர துணை செயலர் அமுல்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ