மேலும் செய்திகள்
அமைச்சர் ஆன ஜூனியர்; அப்செட் ஆன சீனியர்!
26-May-2026
மேயர் 'ரேஸ்'; விஜய் 'சஸ்பென்ஸ்'
02-Jun-2026
பந்தலுார்: கோழிக்கோடு பகுதியில், 'நிபா' வைரஸ் தாக்கம் காரணமாக, மாநில எல்லையான நீலகிரி மாவட்டத்தில், சுகாதாரத் துறையினர் நேற்று தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு, சமீபத்தில் 'நிபா' வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கேரள எல்லையில் உள்ள, நீலகிரி மாவட்டம் பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில், நேற்று காலை, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் தாளூர், நாடுகாணி உட்பட சோதனை சாவடிகளில் தீவிர ஆய்வுப் பணி நடந்தது. டாக்டர்.சவுந்தரபாண்டியன், சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன் மற்றும் செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின் அனுமதித்தனர்.
26-May-2026
02-Jun-2026