உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நியமன உறுப்பினர் தேர்வு

 நியமன உறுப்பினர் தேர்வு

குன்னுார்: குன்னூர் நகராட்சியில், 30 வார்டுகளுக்கு திமுகவின் புதிய நியமன உறுப்பினர் ய செய்யப்பட்டார். நகர்புற உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன உறுப்பினராக நியமிக்க மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி, குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகளுக்கும் புதிய நியமன உறுப்பினராக தி.மு.க.,வை சேர்ந்த கணேஷ் என்பவர் நியமிக்கப்பட்டு உறுதிமொழி எடுத்து கொண்டார். கமிஷனர் இளம்பரிதி, நகராட்சி தலைவர் சுசிலா, துணைத் தலைவர் வாசிம் ராஜா, கவுன்சிலர்கள் ராமசாமி, சரவணகுமார், மன்சூர் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து, நடைபெற்ற மன்ற கூட்டத்தில் அவருக்கு இருக்கை வழங்கப்பட்டது. கணேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்