உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடையை உடைத்து திருட்டு; வடமாநில தொழிலாளி கைது

கடையை உடைத்து திருட்டு; வடமாநில தொழிலாளி கைது

ஊட்டி; ஊட்டி மொபைல் கடையில் திருட்டில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார். ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள சேட் நினைவு மருத்துவமனையின் அருகே அனிபா என்பவரின் மொபைல் கடையில் மேற்கூரை உடைக்கப்பட்டு, 15 மொபைல்கள் திருடப்பட்டது. அனிபா, ஊட்டி மத்திய போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். டவுன் டி.எஸ்.பி., நவீன் குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மொபைல் திருட்டில் ஈடுபட்டது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகமது அர்பஜ்,25, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை