உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் ராணுவ பகுதி அலுவலகத்தில் ஓணம் திருவிழா

குன்னுார் ராணுவ பகுதி அலுவலகத்தில் ஓணம் திருவிழா

குன்னுார்; குன்னுார் ராணுவ பகுதியில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. குன்னுார் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் அமைந்துள்ள, இந்திய பாதுகாப்பு கணக்கு சேவையின், எம்.ஆர்.சி., பண கணக்கு அலுவலகத்தில் நேற்று ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. அதில், மகளிரின் திருவாதிரை நடனம் அனைவரையும் கவர்ந்தது. ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்த அதிகாரிகள், ஊழியர்கள் குழு பாடல்கள் பாடினர். தொடர்ந்து பாடலுக்கு ஏற்ப நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. ஓணம் சத்ய எனும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மாலையில், இசை நாற்சாலி, தண்ணீர் பலுான் விளையாட்டு, வடவளி எனும் கயிறு இழுத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !