உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொக்லைன் இயந்திரம் இறக்கும் போது நடந்த விபத்தில் ஒருவர் பலி

பொக்லைன் இயந்திரம் இறக்கும் போது நடந்த விபத்தில் ஒருவர் பலி

கூடலுார்: கூடலுார் அருகே, டிப்பர் லாரியிலிருந்து பொக்லைன் இயந்திரம் இறக்கும்போது ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ஐனுல்ஹக், 26. இவர் கூடலுாரில் தங்கி, பொக்லைன் இயந்திரம் டிரைவராக பணியாற்றி வந்தார். கூடலுார் இரண்டாம் மைல் பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு டிப்பர் லாரியில் பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி, கல்லிக்கரை பகுதிக்கு சென்றார். அங்கு, லாரியில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை இறக்கும் போது, லாரியுடன் பொக்லைன் இயந்திரமும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில், படுகாயம் அடைந்த ஐனுல்ஹக் சிகிச்சைக்காக, கூடலுார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தேவர்சோலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை