உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குளிருக்கு தீ மூட்டிய போது மூச்சு திணறி ஒருவர் உயிரிழப்பு

குளிருக்கு தீ மூட்டிய போது மூச்சு திணறி ஒருவர் உயிரிழப்பு

ஊட்டி: ஊட்டி அருகே குளிருக்கு தீ மூட்டிய போது மூச்சு திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். ஊட்டி அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ், 34, என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கடும் குளிர் காரணமாக அடுப்பில் நெருப்பு மூட்டி உள்ளார். வீட்டில் இவருடைய மனைவி புவனா 28, மகள் தியாஸ்ரீ 4, மற்றும் உறவினர்கள் சாந்தா 59, ஈஸ்வரி, 57ஆகியோர் தங்கியிருந்தனர். மறுநாள் காலையில் வீட்டிலிருந்து புகை வந்துள்ளதை அருகில் உள்ளவர்கள் பார்த்து கதவை தட்டியுள்ளனர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்துப் பார்த்ததில் வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் இருந்தனர். எமரால்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மயங்கி கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், ஜெயப்பிரகாஷ் இறந்தது தெரிய வந்தது. மேலும் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை