உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒருவர் உயிரிழப்பு: நால்வர் மீது கொலை வழக்கு

ஒருவர் உயிரிழப்பு: நால்வர் மீது கொலை வழக்கு

பந்தலுார்; பந்தலுார் அருகே, தகராறில் காயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பந்தலுார் அருகே சேரம்பாடி டான்டீ பகுதியை சேர்ந்தவர் உதயராஜ்,37. இவர் குடும்பத்துடன் எருமாடு மாதமங்கலத்தில் வசித்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வெட்டுவாடி ஆண்டன்சிரா பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை என்பவரின் வீடு கட்டுவதற்காக வரைபடம் வரைந்து கொடுத்துள்ளார். இதற்கான கட்டணமாக, 5-,000 ரூபாய் பேசப்பட்ட நிலையில், பொன்னுதுரை முதல்கட்டமாக. 1,500 ரூபாய் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கேட்டபோது, கடந்த, 23ம் தேதி எருமாடு பஜாருக்கு உதயராஜை அழைத்த சென்ற பொன்னுதுரை, தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, பொன்னுதுரை மற்றும் அவ ரின் நண்பர்கள் சிலர் சேர்ந்து உதயராஜை தாக்கி உள்ளனர். அதில், காயமடைந்த உதயராஜ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து, இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி விசாரணை செய்து, தாக்குதலில் ஈடுபட்ட, பொன்னுதுரை,30, கண்ணதாசன்,57, அன்பழகன்,42, ஜான் பீட்டர்,42, ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். அவர்கள்,கூடலுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உதயராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, நால்வர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ