உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி சீரங்கடவு பகுதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, 40. பழங்குடியினரான இவர், நேற்று முன்தினம் காலை பசுமாட்டை மேய்க்க வீட்டின் அருகே உள்ள வனத்தினுள் சென்றார். அங்கு காட்டு யானையிடம் அவர் சிக்கிக்கொண்டார். தப்பியோட முயன்ற அவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டுக்கு திரும்பி வராததால் நேற்று உறவினர்களும் ஊர் மக்களும், வனப்பகுதிக்குள் வெள்ளிங்கிரியை தேடி சென்றனர். அங்கு, அவர் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், வெள்ளிங்கிரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி