அரசு துறை பொறியாளர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் ஒரு வாரம் பயிற்சி
பாலக்காடு, ; கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி., வளாகத்தில், கட்டடப் பொறியியல் துறையும், கேரள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவன மும் இணைந்து, இந்த பயிற்சிப் பட்டறையை நேற்று துவங்கியது. ஒரு வாரம் நடக்கும் பயிற்சி பட்டறையை, ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் சேஷாத்திரி சேகர் துவக்கி வைத்து பேசுகையில், ''சாலைப்பாதுகாப்பு, தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் புதுமைகள் குறித்து விவாதிக்க இந்த பயிற்சி பட்டறை ஒரு தளமாக இருக்கும்,'' என்றார்.கட்டட பொறியியல் துறை தலைவரும், இணை பேராசிரியருமான சுதீஷ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இணை பேராசிரியரும் தொடர் கல்வி மையத்தின் தலைவருமான கண்மணி சுப்பு, கட்டட பொறியியல் துறை இணை பேராசிரியர் பவத்ராதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.