ஊட்டி கேரட் விலை வீழ்ச்சி
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை தோட்ட காய்கறிகளான, கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்டவை, மேட்டுப்பாளையம், சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த, 5ம் தேதி ஒரு கிலோ கேரட் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது. தொடர்ந்து, 4 நாட்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. 5 முதல் 20 ரூபாய் வரை வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.