உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திறந்த நிலையில் கிணறு வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்

திறந்த நிலையில் கிணறு வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்

பந்தலுார்: பந்தலுார் அருகே மாங்கமூலா பகுதியில், ஊராட்சி குடிநீர் கிணறு திறந்த நிலையில் இருப்பதால், வனவிலங்குகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொளப்பள்ளி அருகே மாங்கமூலா கிராமம் அமைந்துள்ளது. கிராமத்திற்கு செல்லும் சாலையை ஒட்டிய கீழ் பகுதியில், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஊராட்சி பராமரிப்பில் உள்ள குடிநீரை கிணறு உள்ளது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள், கிணற்றுள் விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஊராட்சி மற்றும் தனியார் கிணறுகளின் மேல் பகுதியில் மூடி அமைக்க வேண்டுமென வனத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், சாலையின் கீழ் பகுதியில் திறந்த நிலையில் மாங்கமூலா கிணறு இருப்பதால், வனவிலங்குகள் செல்லும் போது தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற கிணறுகளை ஆய்வு செய்து, மேல்பகுதியில் மூடி அமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ