மேலும் செய்திகள்
வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையால் அச்சம்
03-Sep-2025
கூடலுார்; நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியில், 2023 ஜன., வரை, 11 பேரை தாக்கி கொன்ற, 'ராதா கிருஷ்ணன்' என அழைக்கப்படும் காட்டு யானை பிடிக்க மக்கள் வலியுறுத்தினர். வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் அதனை வேறு பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், அதே யானை கடந்த ஆக.,11ம் தேதி, நியூஹோப் பகுதியில் மணி என்பவரை, தாக்கி கொன்றது. அதனை பிடிக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த யானையை பிடிக்க, வனத்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில், அந்த யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவதற்கான உத்தரவை, மாநில முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, கூடலுார் வனத்துறைக்கு வழங்கினார். தொடர்ந்து, கூடலுார் வனத்துறையினர் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கை, கும்கி யானைகள் பொம்மன், சீனிவாசன் உதவியுடன் நேற்று துவக்கினர். கூடலுார் வன அலுவல ர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், '' யானையை பிடிக்கும் பணியை கண்காணிப்பதற்காக, முதுமலை கள இயக்குனர் தலைமையில், தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண் டும்,'' என்றார்.
03-Sep-2025